ஒரு மரணம்
ஆயிரம் பேராசிரியர்கள்
கற்றுத்தர முடியாததை
எளிதாக
கற்றுத்தர தந்துவிடும்
ஒரு மரணம்...
எல்லோரும்
காத்திருக்கிறோம்
நம் சொந்த
மரணத்திற்காக...
அநேகமாக,
சாவு மட்டுமே
மிச்சமிருக்கிறது
ஒவ்வொரு
உயிருக்கும்...
நேற்று
என் எதிர்வீட்டில்
ஒரு மரணம்....
எரித்துவிட்டு
திரும்புகையில்,
வீட்டிற்கு
வழி காட்டியது,
சவ ஊர்வலத்தில்
இறைக்கப்பட்ட
பூக்கள்...
ஆனால்,
எனக்கென்னவோ
தோன்றுகிறது,
அனைத்துப் பாதைகளும்
மயானத்தை
நோக்கியே
செல்வதாக....
✍️கவிதைக்காரன்