விதி வளர்க்கும் விதைகள்

எள்ளின் விதையிலே எண்ணெயும் பிண்ணாக்கும்
நெல்லின் விதையிலே சோறும் மாவும்
உளுந்தின் விதையிலே பருப்பும் மாவும்
முந்திரி விதையிலே துகளும் விழுதும்
தக்காளி கொய்யா சுண்டை விதைகள் முளைக்கவே
வாழையின் விதையோ வகையில்லா நிலையிலே
கடுக்காய் மாசிக்காய் விதைகள் இழைத்து பூசவே
பட்டாணி கடலையின் விதைகள் நொறுக்கு தீனியாய்
சிலவற்றின் விதைகளோ ஆடம்பர மணியாய் தோளில்
பாலோடும் நீரோடும் சேர்த்த சில விதைகள் சுவைக்கு
ஆயுளை முடிந்து விடவும் சில விதைகள் முதிர்ந்தே
பண்டங்கள் விற்க எடைக்கல்லாய் சில விதைகள்
கலப்படம் செய்யவே அசல் போன்ற சில விதைகள்
விதையின்றி உலகிலே எதுவும் இல்லையே
விளங்கி வாழ்ந்தால் எல்லாவற்றாலும் நன்மையே.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (16-Sep-21, 7:52 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 67

மேலே