நீயும் நானும்
துயில் கொள்ளும்
குழந்தை நானாக
தூளி அசைக்கும்
காற்றும் நீயாக
மயில்தோகை
நானாக அதில்
வண்ணங்கள்
நீயாக
அல்லியும் நானாக
என்னில் தவழும்
மழைத்துளியும் நீயாக
இரவோடு நான்
உறவாக
மின்னூட்டம் பெற்ற
நீயும் மின்மினியாக
மொட்டவிழ்க்காத
தாமரை நானாக
என்னில் தேன் தேடும்
பட்டம்பூச்சியும் நீயாக
நான் உன்னைச் சேர
உயிரோடு உறைய...
சம்மதமாய் உன்
மௌனம் போதுமே
இவ்வேளையில்...