சமர்ப்பணம்
கவிஞன் என்னும் பெயர்
எனக்கு கிடைத்தது
உன்னால் தான்...!!
உன்னை காதலிக்கும் போது
உன் அழகை வர்ணித்து
நான் எழுதிய வார்த்தைகள்
எல்லாம் "கவிதையே '
அவை யாவும்
"இளமை கவிதை"
என்று பெயர் பெற்றது..!!
நீ என்னை பிரிந்தப்போது
உன்னை நினைத்து
நான் எழுதியது எல்லாமே
"தத்துவ கவிதை" என்று
எல்லோரும் விரும்பி
வாசித்தார்கள்...!!
கவிஞன் என்று எனக்கு
கிடைத்திருக்கும்
பெயருக்கும் புகழுக்கும்
"கரு பொருள்"
இனியவளே நீ தான்
எனவே யாவும் உனக்கே
"சமர்ப்பணம்" ...!!
--கோவை சுபா