மழை காலம்

மழை பெய்து
கொண்டே இருக்கு
ரோட்டில் மழை நீர்
ஓடிக்கொண்டே இருக்கு..!!

ஓடுகின்ற மழை நீரில்
காகித கப்பல் செய்து
நண்பர்களுடன் விளையாடி
மகிழ்ந்த காலம் நினைவுக்கு
வந்து போனது

அந்த மகிழ்ச்சியோடு
பாட்டியிடம் நன்றாக
உதை வாங்கியதும்
நினைவுக்கு வந்து போனது ...!!

உண்மையில்
அது ஒரு வசந்த காலம் தான்
நினைத்து பார்த்தாலே
மனம் எங்கும் ஆனந்த ராகம் ..!!

ஆனால்
இந்த கால சிறுவர்களுக்கு
அந்த சுகம் நினைத்து
பார்க்கக்கூட இயலாது ...!!

Rain Rain go Away
Come again another day
என்று Nursery Rhyme
பாடி தான் மகிழ முடியும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Oct-21, 5:38 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : mazhai kaalam
பார்வை : 178

மேலே