தூணிலும் உள்ளான் துரும்பிலும் என்மால்

நீ கூறும் உன்கடவுள் எங்கெல்லாம் உள்ளான்
சொல்வாயா என்மகனே பிரகலாத என்று
என்று கோபத்தின் உச்சத்தில் இருந்த
இரணியன் கேட்டான்.... பின்னே இதோ
இந்த தூணில் உள்ளன கூறு என்க
ஆம் ஆம் தந்தையே எங்கண்ணன்
எங்கும் உள்ளான் எதிலும் உள்ளான்
தூணிலும் உள்ளான் துரும்பிலும்
இத்தனை ஏன் இல்லை என்று நீசொல்லும்
வாக்கிலும் உள்ளன என்றான்.... இதைக்கேட்டு
விருட்டென்று தன கூறிய வாள்கொண்டு
அந்த தூணைத் தாக்கினான் மூடன் இரணியன்
தூண் பிளந்தது அக்கணமே தூணின்று
அவதரித்தான் அங்கோர் உருவாய்
பாதி மனிதனாய் பாதி அரிமாவாய்
'நரசிம்மன்' அவனே...தூணில் அந்தர்யாமியாய்
இருந்து பக்தனின் குரலுக்கு செவிசாய்த்து
அவதரித்த பெரும்பொருளாய் வந்தான் மால்
இரணியனை மாய்த்தான் அவன் அகந்தையையும்
காருண்யன் அல்லவா அவன் தன கைகளில்
மாய்ந்த இரணியனுக்கும் அவன் மோட்சம் தந்தான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Oct-21, 10:16 am)
பார்வை : 188

மேலே