வாழ்க்கையில் எது என்ன எப்படி

வாழ்க்கை என்பது என்ன? நாம் தினமும் எப்படி வாழ்கிறோமோ அதுதான்
வாழ்க்கை பயணம் என்பது என்ன? நாம் தினம் வாழும் வாழ்க்கை முறை
நன்மை என்பது என்ன? உடலையும் மனதையும் நலமாக வைக்கும் செயல்
தீமை என்பது என்ன? நம் உடலை உள்ளதை சிதைக்கும் எந்த ஒரு செயலும்
மகிழ்ச்சி என்பது என்ன? நம்மில் அன்பும் அமைதியும் ஊறும் தருணங்கள்
கவலை என்பது என்ன? மனதில் மகிழ்ச்சி இல்லாத ஒவ்வொரு நேரமும்
ஆசை என்பது என்ன? நாம் அடையவேண்டும் என நினைக்கும் எல்லாமும்
பேராசை என்பது என்ன? மனத்திருப்தி தராமல் இருக்கும் ஆசைகள்
உதவி என்பது என்ன? பிறர்க்கு தோள் கொடுக்கும் ஒவ்வொரு செயலும்
சேவை என்பது என்ன? எதிர்பார்ப்பின்றி செய்யும் ஒவ்வொரு உதவியும்
காதல் என்பது என்ன? மோகமும் காமமும் கலந்த இயற்கை உணர்வு
அன்பு என்பது என்ன? காதலும் காரணமும் இல்லாமல் காட்டும் பரிவு
நண்பன் என்பவன் யார்? அவனது ஒய்வு நேரத்தில் நம்மை நாடுபவன்
உண்மை நண்பன் யார்? நமக்கு தேவை படுகையில் நம்முடன் இருப்பவன்
பகைவன் யார்? நம்மில் வெறுப்பு கொண்ட சில பேர் மற்றும் நம் மனம்
அதிருஷ்டம் என்பது என்ன? உழைப்பை மீறி கிடைக்கும் பொருட்கள்
துரதிருஷ்டம் என்பது?அதிர்ஷ்டத்தை பின்புறத்திலிருந்து தாக்கும் சக்தி
மனிதன் என்பவன் யார்? பகைவனாயினும் நன்றாக இருக்க நினைப்பவன்
தெய்வம் என்பது? சமுதாயத்திற்கு சேவை செய்யும் ஒவ்வொரு மனிதனும்

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (19-Oct-21, 7:59 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 65

மேலே