காமம் பயங்கொள்ளாது
ஒழுகிசை அகவல் ஓசை உடைய
நேரிசை ஆசிரியப்பா
பணக்குறி கொண்டான் கொள்ளான் குருவின்
பக்தியும் இழப்பன் உறவுடன் சுற்றம்
கொள்ளான் என்றும் மற்றொரு இலட்சியம்
பசித்தோன் காதடைக் கத்தே டானே
பதமும் ருசியும் பத்தும் பறந்துபோம்
கற்பான் மறப்பான் வசதி யுறக்கம்
நினைப்பன் முன்னே குறிக்கோள் ஏற்றம்
பயமும் நீக்கி வெட்கமும்
மானமும் மறப்பவன் காமுக னாமே