என்னவள் அசைவில் ஏகாந்தம்

என்னவள் விழி அசைவில் சுழன்றது பூமி ஓர் அச்சில் நிலைத்து

என்னவள் கை அசைவில் காலை உதித்தது கதிரவன்

என்னவள் சிரிப்பில் வானம் மின்னியதே மின்னல்

என்னவள் பேச்சில் ஓயாது வீசியது
கடல் அலை

என்னவள் எனை காணாமல் சிந்திய கண்ணீர் உதிர்ந்ததே மழை

என்னவள் என்மேல் ஏக்கம் கொண்ட
பெருமூச்சே புயல்

என்னவள் இதழ் அசைவில் ஒலித்ததே யாழ் இசை

என்னவள் பாடிய பாடலே கூவும் குயில் ஓசை

என்னவள் இமை அசைவில் கணித்ததே ஒரு நொடி

என்னவள் துயில் கொண்டதே இரவு அதில் வந்த கனவே முழுநிலவு

எதிலும் கண்டேன் அவள் அசைவை
அதில் ஆசை கொண்டேன் ஏகாந்தம்

எனும் அவள் அன்பை.

எழுதியவர் : பாளை பாண்டி (10-Nov-21, 9:26 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 517

மேலே