காதல் பிச்சை பாத்திரம்
நேற்றோடு அவள் சென்றாள்
இன்றோடு போராடுகின்றேன்
நாளையேனும் அவள் வருவாள் என...
ஆயிரம் உறவு இருந்தும்
அனாதை ஆனேன்
அவள் இல்லாதபோது...
ஒரு தாயின் அன்புக்காக
ஏங்கும் அனாதை
குழந்தையாய் என் மனது...
தினம் தினம்
காதல் பிச்சை பாத்திரம்
ஏந்தி அழைகிறேன்
அவள் அரைவணைப்புகாக.....