அட்டமி நவமி
அட்டமி நவமி.
அட்டமி நவமி
நாள் பார்த்து,
என்ன காரியம்
நடந்தது நன்றாக?
உண்மையைச்
சொல்லுங்கள்!
நடந்தது எல்லாம்!
தலையால் வந்தவன்,
" நான் "
காலால் வந்தவன்,
" நீ "
என்று சொன்னானே!
அவன் பிழைத்தது
தான் மிச்சம்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.