பறந்து வா பச்சைகிளியே
"கதை சொல்லவா ?
ஒரு கதை சொல்லவா ?
கண்கள் தொடங்கி வைச்ச கதை,
கண்ணீர் முடித்து வைச்ச கதை,
அந்த கதை சொல்லவா ?
சொந்த கதை சொல்லவா ?
கருத்து ஒருமிச்ச கதை,
காலம் மறைச்சு வைச்ச கதை,
அந்த கதை சொல்லவா ?
நொந்த கதை சொல்லவா ?
அன்னக்கிளியும் சொர்ணகிளியும் பார்த்துக்கிச்சாம்,
வண்ண கிளியும் வர்ண கிளியும்
சேர்ந்துக்கிச்சாம் ,
பச்சமலை காட்டுக்குள்ள கிளிகள்
இரண்டும் சிக்கிக்கிச்சாம்,
உச்சி மலை குகைக்குள்ளே
அதுக இரண்டும் சொக்கிக்கிச்சாம்,
கிளிகள் ரெண்டும் சேர்த்து வைத்த கோவகாயி கனியல,
கனவு கண்டு கட்டி வச்ச கூடு
இன்னும் முடியல ,
உள்ளுக்குள்ள கொட்டி கிடந்த
ஆசையது தணியல,
கட்டிக்கிட்டு வாழ நினைச்ச
கனவு இன்னும் மறையல,
அதுக்குள்ள நடந்ததெல்லாம்
எனக்கு ஒன்னும் தெரியல,
நடப்பதெல்லாம் தடுப்பது எப்படி
எனக்கு ஒன்னும் புரியல,
பாகற்காய கடிச்சது போல்
வந்தது பாரு கசப்பு ,
பாசம் என்னும் தீரலேன்னு
நினைப்பது வெறும் பசப்பு!
பச்சகிளியே நெஞ்சுக்குள்ள
இப்பவும் உன் நெனப்பு,
இச்சகிளியே நீ பறந்து வந்து
சேராவிட்டால் நின்னு போகும் உயிர்த்துடிப்பு,
கதை சொல்லவா ?
ஒரு கதை சொல்லவா ?
கண்கள் தொடங்கி வைச்ச கதை,
கண்ணீர் முடித்து வைச்ச கதை,
அந்த கதை சொல்லவா ?
சொந்த கதை சொல்லவா ?
கருத்து ஒருமிச்ச கதை,
காலம் மறைச்சு வைச்ச கதை,
அந்த கதை சொல்லவா ?
நொந்த கதை சொல்லவா ?"