வெளிநாட்டு வாழ்க்கை

கண் வலி என்றாலும்
கண்ணில் ஊதிவிட முடியாது..,
தலைவலி என்றாலும் - தோளின்மேல்
தாங்கிக்கொள்ள முடியாது..,
உடல்வலி என்றாலும் - உடனிருந்து
உணரமுடியாது.
மனம் வலித்தாலும் - உன்
மனம் வலித்தாலும் - என்
மடிமீது ஆறுதல் சொல்ல முடியாது..,
தூரத்து விண்மீன்களுக்கு தெரியும் - இரவில்
தூங்காமல் கண்கள் சிந்தும் வலிகளின்
துயரம்தனை.
வெளிநாட்டு வேலையில்
வெகுளியை மாட்டிக்கொள்ளும்
வெள்ளந்தி உயிர்கள்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (1-Dec-21, 5:53 pm)
பார்வை : 384

மேலே