பெருமரப் பட்டை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பெருமரப் பட்டையது பேதி கிராணி
மருவிரத்த நோயினத்தை மாற்றுந் - திருவே
நடலைபுரி வாதத்தை நாடாத கற்றும்
உடலையிரட் சிக்குமென வோது
- பதார்த்த குண சிந்தாமணி
பேதி, கிராணி, உதரநோய், வாதம் இவற்றை பெருமரப்பட்டை நீக்கி உடலைப் பருக்கச் செய்யும்