விழுதி இலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

விழுதித் தழைகரப்பான் வெண்மேகம் நீக்கும்
பழுபடுவன் சூலைநோய் மாறும் - எழுபேதி
யாக்குமதி மாந்தம் அகக்கிருமி துன்மலமும்
போக்கும் அதுவே புகல்

- பதார்த்த குண சிந்தாமணி

விழுதியிலை கரப்பான், வெண்மேகம், படுவன், சூலை மந்தம், மலக்கிருமி இவற்றைப் போக்கும்; பேதியை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jan-22, 9:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே