துத்தி இலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ்
சாலவதக் கிக்கட்டத் தையலே - மேலுமதை
எப்படியே னும்புசிக்க எப்பிணியுஞ் சாந்தமுறும்
இப்படியிற் றுத்தியிலை யை

- பதார்த்த குண சிந்தாமணி

இவ்விலையை ஆமணக்கு நெய்யால் வதக்கிக் கட்டினால் மூலநோய் கட்டியின் இரணமுளைகள், கிருமி, இரணம் இவை நீங்கும்; இவ்விலையை எப்படி உண்டாலும் பலவகை நோய்கள் அகலும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jan-22, 8:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே