இப்படியும் ஒரு வாழ்க்கை
மனைவி அமைவதெல்லாம்
அவரவர் ஊழ்வினை
ஒருவருக்கு வரம்
மற்றவருக்கு அதுவே சாபம்
எனக்கும் ஒரு மனைவி அமைந்தாள்
எப்போதும் என் இரத்த அழுத்தத்தை
உயர்த்திக்கொண்டே இருப்பாள்
வரம் கேட்காத எனக்கு கடவுள் கொடுத்த சாபம்..
சூரியனின் வெப்பத்தை விட
அவளின் வார்த்தைகளின் வெப்பம் அதிகம்
கொடுத்துக்கொண்டே இருந்தாலும்
கெடுத்துக்கொண்டே இருப்பாள்
என் நிம்மதியை
புயலில் சிக்கிய குடிசைகள் போல்
அவளிடம் சிக்கிய என் வாழ்க்கை
எதற்கெடுத்தாலும் தர்க்கம்
தானென்ற அகம்பாவம்
அன்பில்லாச் சோறு தினமும்
பண்பில்லா நீருடன்
இது என்னைவிட்டு என்று ஒழியும்
இறைவனுக்கே வெளிச்சம்
ஒன்று மட்டும் உறுதி
என்னை சிதையில் வைத்தால் தான்
அது என்னைவிட்டு ஒழியும்
காத்திருக்கிறேன் அந்நாளுக்காக...
.