திறப்பு விழா
திறந்த நிலையங்கள் மீண்டும் திறந்தார்
துறக்காமீண் டுதுகி லுறிப்பெண் - அறமும்
சிறக்கத் திறந்த நிலையம் பலவும்
அறம்சிறக்கா மந்திரி பலர்
அறம்காக் கமைச்சர் வளாகம் பலவும்
திறந்து நுழைந்தனர் மீண்டும்
அரசர் அன்று மாபெரும் கோபுரங்கள் கட்டித் திறந்தார், ஒரேயொரு முறை
இன்றோ அமைச்சர்கள் மனையாளும் துறக்கா அவளையும் தக்கவைக்க
அடிக்கடி திறக்கும் தன்மைபோல ஏற்கனவே திறந்த கட்டடங்களை மீண்டும்
மீண்டும் பெயர் மாற்றித் திறந்து வைக்கிறார் பாரும்
அவர் வேறெந்த நல்ல பணி யும் செய்ததில்லை