அவள் இதழ்கள்
உயிர்த் துடிப்பு காணும்
உயர்ந்த அலர்ந்த தாமரை இதழ்போல்
காணும் சிவந்த இதழ்கள் உன்னிதழ்கள்
அவ்விதழோரம் சிந்தும் உன்மந்திரப் புன்னகை
என்னை மயக்குகிறதே பெண்ணே இன்னும்
காத்திருக்க முடியவில்லை இதோ இதோ
என்னிதழ்கள் அதில் கொஞ்சம் இன்பம் சேர்த்திடுவாயா
முத்தம் இட்டு உன்னிதழ்களில் சிந்தும்
காமத் தேன் சேர்த்து