சகதியா சந்தனமா
இதை
சகதி என்பதா
சந்தனம் என்பதா
ஒரு அரைச்ச சந்தனம்
சகதியில் கலந்ததா
அல்லது ஒரு சகதி கொத்து
கமழும் சந்தனத்தில் கலந்ததா
எது எப்படியோ
ஒரு சந்தனம் தினம் தினம்
பல சகதிகளில் குளித்து
தன் வயிற்றை கழுவிக்கொள்கிறது
படைத்தவனுக்கென்ன
வேடிக்கைப் பார்ப்பது தானே வேலை...
.