நன்மை பயத்தல் இலாதன மூன்று – திரிகடுகம் 63

நேரிசை வெண்பா

நேர்வஞ்சா தாரொடு நட்பும், விருந்தஞ்சும்
ஈர்வளையை இல்லத் திருத்தலும், - சீர்பயவாத்
தன்மை யிலாளர் அயல்இருப்பும், இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல 63

- திரிகடுகம்

பொருளுரை:

சண்டை சச்சரவிற்கு அஞ்சாதவரோடு நட்புக் கொள்ளுதல்,

விருந்தினர்க்கு உண்டி கொடுக்க அஞ்சுகின்ற அழகிய வளையலையணிந்த மனைவியை தான் வாழும் இல்லத்தில் இருக்கச் செய்தல்,

சிறப்பைத் தராதததும் நல்லகுணங்களை இல்லாததும் உடையவரின் அருகில் குடியிருத்தல் ஆகிய இம் மூன்றும் நன்மையைத் தருவதில்லை எனப்படுகிறது.

நேர்வு
நேர்
1. Happening; சம்பவம்.
2. Consent; உடன்பாடு
5. Opposing; எதிர்கை. வஞ்சனி ராமனை நேர்வுறா (கம்பரா. இராவணன் வதை. 243)
6. Fighting; பொருகை

ஈர்வளை - குளிர்ந்த வளையல் அணிந்தவள் (

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Feb-22, 4:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே