கண் காண அரியவென் மூன்று – திரிகடுகம் 71

நேரிசை வெண்பா

உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர்
தொடுத்தாண் டவைப்போர் புகலும் - கொடுத்தளிக்கும்
ஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும்
காண அரியவென் கண் 71

- திரிகடுகம்

பொருளுரை:

உடுக்கப்பட்ட ஆடை இல்லாதவர் நீராடுதலும்,

பெண்கள் பிறரோடு வழக்குத் தொடுத்து அங்குள்ள சபைகளிடத்தில் போர்க்குப் புகுதலும்,

பிறர்க்குக் கொடுத்துக் காக்கின்ற ஆண் தன்மை உடையவரது வறுமையும் ஆகிய இந்த மூன்றும் என் கண்கள் பார்க்கத் தகுவன அல்லவாம்.

கருத்துரை:

ஆடையின்றி நீரில் இறங்கிக் குளிப்பதும், பெண்கள் வழக்குத் தொடுத்து மன்றேறுதலும், கொடையாளர்கள் வறுமை யுறலும் காணக்கூடிய வல்ல எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Feb-22, 10:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

சிறந்த கட்டுரைகள்

மேலே