காதலர் தினத்தில் அவளுக்காக ஒரு கற்பனை

ஆண்டுதோறும் நடக்கும்
ஒரு விழா இப்பெருவிழா
காதலர் கோயிலில்
இன்று திருவிழா

அவள் நிலவில்லை
அவளின் முகம்
போல உள்ளது நிலவு

அவள் தேவதை அல்ல
அவளிடம் தேவதைகள்
அமுதப் பிச்சை எடுக்காது அழகு பிச்சை எடுக்கிறார்கள்

அவள் சிலை அல்ல
அவளைப்போல இருக்கின்றன
சிலைகள்

அவள் ஐஸ்கிரீம் அல்ல
அவளைப் பார்ப்பவர்களுக்கு குளிர்ச்சி ஏற்படுகிறது

இவளின் அம்மாவின் பெயர் நிச்சயம் அழகம்மா தான்
இவளின் அப்பாவின் பெயர் நிச்சயம் அழகப்பன் தான்

அனைவரும் குங்குமப்பூ சாப்பிட்டு பிறப்பார்கள் இவள் மட்டும் குங்குமப்பூவிற்கே பிறந்தவள்

இந்தக் கிளியை பார்ப்போருக்கு எல்லாம் கிளி பிடித்தது

இவளின் சந்தன தேகத்தை கண்டிருந்தால்
என் அண்ணன் வீரப்பன்
இவளைத்தான் கடத்தி இருப்பார்

இவளின் புறத்தை கண்டிருந்தால் இரட்டை கோபுரத்தை இடிக்காது இவளைத்தான் இடித்து இருப்பான் பின்லேடன்

கண்டதும் தோகை விரித்து ஆடுகிறது ஆண்மையில்
மின்னல் அடித்து போகிறது ஆண்மையில்

மேக மழை பொழிந்து விவசாயிக்கு மட்டும் தான் நன்மை
இவள் தேக மழை பொழிந்தாள்
உலகிற்கு நன்மை

எழுதியவர் : Kumar (14-Feb-22, 11:05 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 108

மேலே