பூவுலகின் பேரழகி8
உன்னைப் பற்றி
கவி எழுதி எனக்கு திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் இன்னும் உன் வாய் பூ தான் கிடைக்கவில்லை
வாட்ஸ் ஆப்பில்
ஆன்லைனில் இருக்கிறாய்
ஆனால்
இந்த ஆண் லைனில் வர
மறுக்கிறாய்
கோயிலில் அனைவரும்
கற்சிலைகளை வணங்கும்போது
நான் மட்டும் உன் பொற்சிலையை
வணங்கி நின்றேன்
மயில்
குயில்
நிலா
தேன்
வண்ணத்துப் பூச்சி
தேவதை கடைந்த அமிர்தம்
குங்குமப்பூ
கிளி
கிளியோபாட்ரா
மல்லிகை
இவைகளின் வயிற்றில்
ஒரு ஒரு மாதமாய்
பத்து மாதம் இருந்து
பிறந்தவள்
பெண்களின் கூந்தலில் சூடிக் கொள்ள விரும்புவது மலர்களை
ஆனால் அனைத்து மலர்களும் தன் தலையில் சூடிக் கொள்ள விரும்புவது உன் கூந்தலை
அனைத்துப் பெண்களின் கூந்தலிலும் மனம் செயற்கை
உன் கூந்தல் மனம் மட்டும் இயற்கை
ஏனென்றால் நீ பூவைக்கு பிறக்காது ஒரு பூவிற்கு பிறந்தவள்
ஒரு ஏழை குடிசையில்
அரிசி வடித்து சாப்பிடும் அரசி நீ
என் உள்ளத்தை ஆட்சி
செய்யும் அரசு நீ
நீ பேசும் தமிழுக்கு தமிழ் மாமணியும்
உன் கலையான முகத்திற்கு கலைமாமணியும்
கொடுத்து கௌரவிக்காத
இந்த அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
அரசு கொடுக்காவிட்டால் என்ன
உன் அழகான முகத்திற்கு அழகு மாமணி விருதினை கொடுக்கச் சொல்லி உலகக் கவிஞர்கள் சங்கமத்திற்கு நான் பரிந்துரை செய்கிறேன்.
உன் தந்தை நிச்சயமாக சிறையில்தான் இருக்க வேண்டும்
உன்னைப்போல் ஒரு மயிலையும்
உன் தங்கையை போல் ஒரு தங்கப் புதையலையும்
வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக
இறைவா
என்னை அவள் வீட்டுக்காராகத்தான் ஆக்கவில்லை
அவள் வீட்டு காராக வாவது
மாற்று
அவளோடு நான் பயணிக்க....