மாறிவிடு என் இளைஞனே
ஏறு தழுவும் வீரனே வீறு கொள்
மாறும் உலகில் மாறாமனநிலையில்
பேறுபெற்றிட பெருந்தவம் கொண்டே
சீரும் சிறப்பும் நாடிடும் என்று
கூச்சலிடும் ஊடகம். தவிர் நொடிக் ஒருசெய்தி தரும் பேஸ்புக் அகற்று
மனநிம்மதிக்கு புகைக்காதே
மாறுதலுக்காக குடிக்காதே அதை
அரசே விற்றாலும்
கருத்தில் கொள் புதுதெளிவு
எழுத்தில் கண்டிடு ஏற்றம்
எண்ணத்தில் வேண்டும் மாற்றம்
எங்கும் வேண்டாம் பதற்றம்
உனை வழிநடத்தும் ஆசிரியர் கை கட்டினோம்
உனை கண்டு அவர் ஒதுங்கிட வழி கண்டோம்
இப்படி எண்ணற்ற இடையூறு பல செய்வோம் அறிவு என்று எண்ணி
ஆயினும் நீ தெளிவு கொள்வதில் தீரன் அல்லவா
பாலில் நீர் அகற்றி பால் மட்டும் உண்ணும் அன்னம் நீ என்று எண்ணி
பாய்ந்து விடு புலியாக
சீறிடு விடு சிங்கமாக
சமுதாய சீர் கேடு நீக்கி
சமுதாய மேம்பாடு நோக்கி
மாறிவிடு என் இளைஞனே
மனிதநேயம் கொண்டே...
உன்பின்னாலும் உண்டுபல சந்ததி
என எண்ணியே ...