கொஞ்சிகொஞ்சி
கொஞ்சி...கொஞ்சி...பேசும் கிளியே
உந்தன் குரல் தேன் மொழியே...
அஞ்சி வரும் உந்தன் நடையே
தோகை மயில் நாட்டியமே...
கொஞ்சம் கொஞ்சம் என்னை மறந்தேன்
கொஞ்ச கொஞ்ச என்னை இழந்தேன் - நீ
பக்கம்வர பஞ்சாய் பறந்தேன் - உந்தன்
பக்கம் சேர பஞ்சணையை நாளும் நானும் துறந்தேன்.
நானும் உன்னை பார்ப்பதும் அழகா?
நீயும் என்னை சேர்வதும் அழகா?
நாம் இணைந்து வாழ்வினை இங்கே
வாழ்வதுதான் அழகா?
எந்தன் தோளில் நீ சாய்வதுதான் அழகா?
உந்தன் மடி தலை சாய்ப்பதுதான் அழகா?
பூக்களில் நீ ஊறிடும் தேனா?
வண்டு தனை மயக்கிடும் மதுவா?
உன்னிதழ் நனைந்திடும் எனக்கது
ஒன்றே அரு மருந்தா?
நோயினில் வாடி நான் இளைத்தேனே
நீவந்து சேர்ந்திட நலமாய் எழுந்தேனே