அல்லியும் தாமரையும்

அல்லித் தோட்டம் அதனில் தடாகம்
அதில் பூத்து குலுங்கும் அல்லிப்பூக்கள்
பக்கத்து தடாகத்தில் வாடி வதங்கிய
தாமரைப்பூக்களைப் பார்த்து கேட்டதாம்
'தாமரையே இப்படி நீ வாடி தொய்ந்ததின் கரணம்
என்னவோ ? என்ன .....அதற்கு தாமரை சொன்னதாம்
' நேற்றுவரை என்னைமட்டுமே காதலித்து வருடிய
பகலவன் பக்கத்து தோட்டத்தில் சூரியகாந்தி
பூக்களை அல்லவோ காதலிக்க சென்றான் இன்று
சூரிய காந்தி பூத்து மலரும் செடியும்
குதுகூலத்தில்.....நானோ என்னை விட்டுப்போனவனை
நினைத்து வாடாது பூத்து குலுங்குவேனோ ? நீயே சொலென்றது

காதலிக்கு ராமனாய் இருத்தலே தூய காதல் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Apr-22, 7:58 pm)
பார்வை : 95

மேலே