கலியுக தாயின் கதறல்

📱📱📱📱📱📱📱📱📱📱📱

*கலியுக தாயின் கதறல்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

📱📱📱📱📱📱📱📱📱📱📱

பொழுது சாஞ்சிருச்சு
பொன்வானம் மங்கிருச்சு
ஆகாய நிலா வந்திருச்சு
அல்லிமலர் மலர்ந்திருச்சு

பன்னிரண்டாம் வகுப்பு
படிக்கப்போன
பாவி மகள் வீடு
திரும்பலையே......!
என்னாச்சு ஏதாச்சு
எதுவும் தெரியலையே...
பத்து மாதம் சுமந்த வயிறு
பத்திக்கிட்டு எரியுதே!
பதினெட்டு வருஷம்
சுமந்த மனசு
பாடாய் படுகிறதே....!

கதறி அழ முடியலையே !
கண்டவங்க கேட்பாங்களே !
சுத்தி கேட்க முடியலையே!
சுருக்கென்னு சொல்லுவாங்களே!

போன மாதம்
பொன்னுசாமி மகள்
ஓடி போனாள் என்று
செய்தி வந்திச்சு....
மூன்று நாளைக்கு முன்னாடி
முனுசாமி மகள்
ஓடிப் போனான்னு
செய்தி வந்துச்சு....
இன்று எம்மகள்
ஓடி போயிட்டான்னு
சேதி வந்திடுமோ?
காலமெல்லாம்
காத்து வச்ச குல மானம்
காத்துல பறந்திடுமோ..?

காசு பணத்திற்காக
யாராவது
கடத்திக்கொண்டு
போய் இருப்பாங்களோ...?
காமக்களியாட்டத்திற்காக
யாராவது
தூக்கிக்கொண்டு
போய்யிருப்பாங்களோ ?
காலம் கெட்டுக் கிடக்கிறது
ஐயோ! கண்ணே !
உன்னை காணலையே !
கத்தி கூட அளவு முடியலையே
கடவுளே !
நான் என்ன செய்வேன் ?

ஆன்லைன் கிளாஸ்
நடக்குதுன்னு
ஆண்ட்ராய்டு போனை
வாங்கி தந்துமே !
ஆன்லைன் கிளாஸ்
விட்டு போனாலும்
ஆண்ட்ராய்டு
விட்டு போகலையே !

ஆண்ட்ராய்டு போனால்
கல்விகற்ற பிள்ளைகளைவிட
காதலிக்க கற்று
பிள்ளைகளே அதிகமாச்சி....
பாதி பிள்ளைகள் ஓடிப்போச்சு
மீதி பிள்ளைகள் நாசமா போச்சு

காதலுக்கு
கண்ணில்லை என்று
சொன்ன காலம் போய்
காதலிக்க
வயசும் இல்லை என்று
சொன்ன காலம் வந்துருச்சு ...

பள்ளி கல்லூரி
போன பிள்ளைகள்
வீடு திரும்பும் வரை
பெத்தவங்க மடியில்
நெருப்பை தந்திடுச்சி...

கைபேசி வந்த நாள் முதல
கள்ளக்காதல் பெருகிடுச்சி....
ரீசார்ஜ் செய்து செய்து
காசு பணம் பாழாய் போயிடுச்சி...

அதோ! அதோ!
என் மகள்
வர மாதிரி தெரியுதே
வாடி ராசாத்தி
ஏண்டி இவ்வளவு நேரமாச்சு
என் உசுரு போயே போச்சு ?

நம்ம ஊரு
நாலரை மணி பஸ்சும்
அஞ்சு மணி பஸ்சும்
வரலையா....?
நான்
என்னமோ ஏதோன்னு
ஒரு நாழி
துடித்து போனேன்னடி....!
துயரத்தில் விழுந்து
தவிச்சேனடி......!

*கவிதை ரசிகன் குமரேசன்*

எழுதியவர் : கவிதை ரசிகன் (6-May-22, 9:58 pm)
பார்வை : 33

மேலே