தினம் தினம்
பிஞ்சுக் குழந்தை
நெஞ்சு பிளக்க
விம்மி அழுதது
கொஞ்சம் பிழைக்க
வற்றிய தாய்ப்பால்
வறண்டுவிட்ட கொங்கைகள்
இரைச்சல் காதில் விழுந்திடவே
எரிச்சலும் இகழ்ச்சியுமாய்
காவல் துறையினர்
உறுத்து விழித்திடவே
தடி கொண்டு மிரட்டிடவே
பயமொன்று படர்ந்திடவே
வறுமை அனுதினம் வதைத்திடவே
கண்ணீரும் உலர்ந்திடவே
செய்வதறியாது கணவனை நோக்கிடவே
குடும்பங்கள் இல்லறம் நடத்தியதே
சாலையோரம் நடைபாதையின்
இடையிடையே ....
-Saishree.R