பலரோடு பன்னாள் முயங்கிப் பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும் , நாலடியார் 220

இன்னிசை வெண்பா

மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇஇப் பின்னைப் பிரிவு 220

- நட்பாராய்தல், நாலடியார்

பொருளுரை:

பலநாள் பலரோடும் சேர்ந்து ஒத்துக் கலந்து பழகிப் பொருளாகத் தகுதி உடையோரையே நட்புக் கொள்ளல் வேண்டும்; ஏனென்றால், கடித்து உயிரை அழிக்கும் பாம்போடாயினும் கூடிப் பின்பு பிரிதல் இன்னாமையாகும்.

கருத்து:

பலமுறை நன்காராய்ந்த பின்னரே தக்காரோடு நட்புச் செய்தல் வேண்டும்.

விளக்கம்:

"ஆயந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை,

பொருவுதல், ஒத்தல்; பரிதல். அறுத்தல் "எருமை கயிறுபரிந்தசைஇ"2 என்புழிப்போல, கடித்தலென்னும் பொருட்டு. பொருட்டக்காரென்றது, உண்மைத் தகுதியுடையாரை என்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-22, 8:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே