சகோதரர் தினக் கவிதை
👬👬👬👬👬👬👬👬👬👬👬
*சகோதரர் தின **
*சிறப்புக்* *கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
👬👬👬👬👬👬👬👬👬👬👬
_சகோதரர் தினம் இன்று....._
*நேற்று......*
அண்ணனுக்குத் தம்பி
இன்னொரு அம்மா...
தம்பிக்கு அண்ணன்
இன்னொரு அப்பா...
கண்ணீரை
துடைத்து விட்டது
அடித்தக் கையே...!
கண்ணீர் உலர்வதுக்குள்
அணைத்து கொண்டது
அடி வாங்கிய கையே..!
பகலில்
கட்டுப்பிடித்துக்கொண்டு
உருண்டாலும்....
இரவில் உறங்கியது
என்னவோ
கட்டிப்பிடித்துக் கொண்டுதான்...
ஒருவர்
மற்றொருவரைப் பற்றி
அம்மாவிடம்
அப்பாவிடம்
போட்டுக்கொடுத்தாலும்..... மற்றவர்களுக்கு
முன்னால்
ஒரு நாளும்
விட்டுக்கொடுத்ததில்லை.....!!!
ஒரு கண்ணில் அடிப்பட்டால்
மறு கண்ணிலும் அல்லவா
கண்ணிர் வடிந்தது..
ஆடையை
மாற்றி அணிந்தற்கு
அடித்துக் கொண்டாலும்...
அன்பு பாசத்தை அளிப்பதற்கு
தவறியவர்கள் அல்லர்....
*இன்று....*
ஐந்து வயதில்
அண்ணன் தம்பி
பத்து வயதில்
பங்காளி என்பார்கள்....
இன்று
ஐந்து வயதிலேயே
பங்காளியாகிறார்கள்...
விட்டுக்கொடுத்து
சேர்ந்து வாழ்ந்தவர்களை விட
இன்று
விட்டுக்கொடுக்காமல்
பிரிந்த வாழ்கின்ற
சகோதர்களே அதிகம்....
பாகப்பிரிவினை
செய்யும் போது
இவர்கள்
பந்தப்பிரிவினையும்
செய்து கொள்கிறார்கள்....
அண்ணன்
தம்பி என்ற உறவு
பெயர் அளவில் தான்
இருக்கிறது
பேச்சளவில் இல்லை....!
*நாளை....*
இனியாவது
சொத்துக்களை மட்டும்
பிரித்துக் கொள்வோம்...!
சொந்தத்தை
பிரிக்காமல் இருப்போம்...!
ஐந்து வயதில் மட்டுமல்ல
ஐம்பது வயதிலும்
அண்ணன் தம்பியாகவே
வாழ்வோம் ......!!!
எவ்வளவு சொத்துக்கள்
சேர்த்து வைத்தாலும்
செத்தபிறகு
அது அழுவதில்லை...
பணத்தின் மீது
எவ்வளவு பற்று வைத்தாலும்
பிணமானப் பிறகு
அது சாங்கியம்
செய்வதில்லை.....
சொத்தோடு மட்டும் வாழாமல்
சொந்தங்களோடும் வாழ்வோம் ! பணத்தை மட்டும் நேசிக்காமல்
பந்தங்களையும் நேசிப்போம்...!
*_அனைவருக்கும் சகோதரர் தின நல்வாழ்த்துகள் .....!!!_*
இவன்
*கவிதை ரசிகர் குமரேசன்*