காதல் மொழியினை ரகசியமாய் மௌனத்தில் சொல்பவளே
கடைந்தெடுத்த அமுதக் கலசத்தை மேனியெழிலில் தாங்கி வருபவளே
கடைவிழியில் காதல் மொழியினை ரகசியமாய் மௌனத்தில் சொல்பவளே
விடைபெறும் அந்தி வானின் ஆரஞ்சு வண்ண பேரெழிலே
நடையழகில் உடையில் மன்மதன் படைகொண்டு வெல்ல வந்தாயோ ?