சிந்தும்தேன் செவ்விதழை சிந்தியலில் ஏந்தவோ
குறட்பாவில் உன்குறு கல்இடையைப் பாடவோ
தேன்மலர் மொக்கென விம்மும் இருமார்பை
பஃறொடையில் பாராட்ட வோஉன் கழிநெடில்
பேரெழில் நீலவிழிக் கோர்விருத்தம் செய்திடவோ
சிந்தும்தேன் செவ்விதழை சிந்தியலில் ஏந்தவோ
சொல்லடியென் அந்திநிலா வே
யாப்பார்வலர் குறிப்பு :--
பல பா பாவினங்களால் பெண்ணழகு பாராட்டும்
இக்கவிதை வடிவமைக்கப்பட்ட பா வகை
பல விகற்ப பஃறொடை வெண்பா
ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிகளால் அமைந்திடும் .