விண்ணும் மண்ணும்
விண்ணில் செலுத்திய
விண்கலங்கள்
வான்வெளியில்
இணைந்தது
விஞ்ஞானிகள் எல்லாம்
மகிழ்ச்சி வெள்ளத்தில்...!!
விண்ணுக்கு செல்லாமல்
ராக்கெட் வேகத்தை
மிஞ்சும் வேகத்தில்
விலைவாசியின் வேகம்
மண்ணில் மக்கள் எல்லாம்
சோக வெள்ளத்தில்...!!
--கோவை சுபா