தந்தையை இழந்த மகளின் ஏக்கம்

பலமுறை உன்னிடம் கோபம் கொண்டுள்ளேன்
ஏன் என்னிடம் அன்பாக பேசவில்லை என்று
பிறரிடம் காட்டும் அன்பை
என்மீதும் பொழியலாம் அல்லவா !!!

நீ இருக்கும் வரை புரியவில்லை
சென்ற பிறகு தான் புரிகிறது
என்னை பற்றி ஊர் முழுக்க பெருமையாக பேசியிருக்கிறாய்
ஆனால் என்னிடம் பேசவில்லையே

உன் அன்பின் வெளிப்பாடு
தான் கோபம் என்பதை இப்பொழுது உணருகிறேன்
மன்னிப்பு கூற முடியவில்லை
ஆதலால் உன் ஓவியத்திடம் கேட்கிறேன்

இன்றும் என் கைபேசியில்
அப்பா என்ற எண்ணில் இருந்து
அழைப்பு வராதா என்று
ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் ...

-Vidhya K

எழுதியவர் : Vidhya K (18-Jun-22, 2:31 pm)
சேர்த்தது : Vidhya
பார்வை : 2777

மேலே