மௌனமாய் பார்க்கிறாய்

வானவில் லைப்போல வண்ணங்களை வாரி இறைக்கிறாய்
தேனைச் சொரியும் முல்லைபோல் மெல்லச் சிரிக்கிறாய்
மேனகையோ ஊர்வசியோ வானத்தின் ஏதோவொரு தேவதையோயென
மானை நிகர்த்த விழியால் மௌனமாய் பார்க்கிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-22, 8:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே