இவரைத் தெரியுமா
இவரைத் தெரியுமா?
இமயமலை சென்று
வந்தேன்,
இறைவனை பார்த்து
வந்தேன்.
சந்திர மண்டலம்
சென்று வந்தேன்,
வரும் வழியில்
வான வில்லை தொட்டு
வந்தேன்.
அர்ச்சுனனிடம் சென்று வந்தேன்,
அவனிடம் வீரம்
கற்று வந்தேன்
கர்ணனிடம் சென்று
வந்தேன்,
அவனிடம் கொடையை
கற்று வந்தேன்.
இவரைத் தெரியுமா?
நானே அவர்!
எனக்கு பெயர்
அண்டப் புழுகன்
ஆகாயப் புழுகன்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.