தொடரும் என் வலிகள் -சகி

என் தூக்கம்
தொலைந்து வெகு
நாட்கள் கடந்து விட்டது...

என் இதழின்
புன்னகை கொண்டு
பல மாதங்கள்
சென்று விட்டது...

உன் பொழுது போக்கு
மாற்றன் மனைவியிடம்
கொஞ்சி கெஞ்சி
உருகுவது எனில்
நான் உன் வாழ்க்கை
பாதையில் தொல்லையாக
நான் எதற்கு ?????

உணர்ந்தும் விலகி
தான் நின்று விட்டேன்...

இனியாவது ஏமாற்றம்
என் வாழ்வில் வேண்டாம் என்று....

தேவையில்லை என்று
என்னை உதாசீன வார்த்தைகளில்
பல முறை கொன்று விட்டாய்...

உன் நம்பிக்கை
துரோகத்தால் என்னை
நடைபிணமக்கனாய்....

என் காதலுக்கு
நீ கொடுத்த பரிசு
நம்பிக்கை துரோ(கி )கம்...


உன் காதல்
பொய் என்ற நாடகம்
மேடையில் என்னை
குப்பையாக தூக்கி
வீசினாய்...

அடுத்தவன் மனைவியின்
மேல் உள்ள மோகத்தில்....

நானும் என் காதலும்
மரணித்த நிமிடம் நீ
அறிவாயா???

உன் காதல்
வேறு ஒருவளுக்கு
சொந்தமென
நீ அனுப்பிய குறுஞ்சேதியில்
உன் கெஞ்சாலும்
கொஞ்சலிலும் உணர்ந்த
நிமிடமே இறந்து விட்டேன்....

மீண்டும் என்னிடம்
காதலை தேடாதே...

மண்ணில் மடிந்து
விட்டது...

என்னுடன் என்
காதலும்.

எழுதியவர் : Sagi (21-Jun-22, 1:06 am)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 56

மேலே