மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை கட்டமைத்த பெரியார்
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரியார் என்றால் முதலில் கடவுளை எதிர்த்தார், தன்னை விட வயதில் சிறிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார், தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என உருவகப்படுத்தினார்கள். இந்த மூன்று கோட்பாடுகளையும் தான் மேடைக்கு மேடை மூச்சரிக்க பேசி பெரியார் ஆதரவாளர்களை விட அதிகமாக வலது சாரிகள் பெரியாரை வளர்த்து வருகின்றனர்.
இதன் தாக்கம் யார் இந்த பெரியார் ? இவரை ஏன் இப்படி எதிர்க்கிறார்கள் ? ஈ.வெ.ரா என்று கூறினாலே ஏன் பதட்டமடைகின்றனர் என்று இளைய சமுதாயம் பெரியாரை தேட ஆரம்பித்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கட்சியினர் கூட பெரியாரை மறந்துவிட்டு தற்கால அரசியல் பேசலாம்,ஆனால் ஒரு சித்தாந்த ரீதியாக கொள்கை ரீதியாக பெரியார் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு நீண்ட நெடிய பயணத்தை நாம் பயணிக்க வேண்டும்.
சரி நம்மால் நீண்ட பயணம் மேற்கொள்ள முடியாது .பயணத்தின் போது இளைப்பாறுவதற்கு டீக்கடையில் அமர்ந்து டீ குடிக்கும் நேரத்தில் பெரியார் குறித்த சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அந்த விஷயங்களும் இளைப்பாறுவதற்கு குடிக்கும் டீயும் உங்களை பயணத்தை சுறு சுறுப்பாக்கும். மேலே கூறிய மூன்று விஷயங்களை பெரியார் கூறினார்.அது எந்த காலத்தில் எந்த சூழ்நிலையில் கூறியது என்று பலரும் கூறி இருப்பார்கள். அது ஒரு புறம் இருக்கட்டும் பெரியாரின் முக்கியமான பயணம் சமத்துவம் ,சகோதரத்துவம் , மனிதநேயம் இவைகளை அடிப்படையாக கொண்டது தான்.
இந்த பயணத்தின் போது அவர் சந்தித்த தடங்கள் தான் சாதி ,மதம் ,கடவுள் இவை எல்லாம். பெரியாரின் கருத்துகளை கம்யூனிஸ்த்தனுடன் ஒத்து போகும் பலர் நினைப்பர். ஆனால் கம்யூனிசத்தின் தந்தை என போற்றப்படும் மார்க்ஸ் கருத்துகளில் முரண்டுபடுவார் பெரியார்.காரணம் மேற்கத்திய நாடுகளில் கம்யூனிசம் பரவிய நேரத்தில் பெரியார் “ அங்கு உள்ள பிரதான பிரச்சனை ஏழை பணக்காரன், முதலாளி தொழிலாளி இவை தான் ஆனால் இங்கு நம் நாட்டில் அந்த பிரச்சனைக்குமுன் வேறொரு உருவம் சாதி மதம் என்று இருக்கிறது.
இது தான் இங்கு முதன்மை பிரச்சனை ஒரு ஏழையிடம் உழைப்பிற்கு ஏற்ப பணம் கொடுத்து அவனை முதலாளியாக, பணக்காரனாக விடலாம், ஆனால் இங்கு நீங்கள் தலைகீழாக நின்றாலும் கீழ்சாதியை சேர்ந்தவனை பணக்காரனாக மாற்றினாலும், அவன் கோயிலுக்கு செல்ல முடியாது.சரி சமமாக அமர முடியாது, தண்ணீர் குடிக்க முடியாது. இதற்கு நீங்கள் கூறும் மார்க்சியம் எடுபடாது அதனை எங்கள் மண்ணிற்கு ஏற்ப நாங்கள் மாற்றுவோம் என்று கூறினார் அது தான் பெரியார் வகுத்த வழி.
அதற்கு ஒரு சிறந்த உதாரணம் மாவோ. இவர் நேபாளத்திலிருந்து ஒரு கம்யூனிச கல்வியாளர் குழு ஒன்று செல்கிறது அவர்களிடம் மாவோ சொல்கிறார் “சாதாரண மக்களிடம் இருந்து நாம் கற்றுத் தெரிந்ததை தவிர நம்மிடம் வியக்கத்தக்கது ஏதுமில்லை.நாம் சிறிதளவு மார்க்சிய லெனினியம் கற்றிருந்தாலும் மார்க்சிய லெனினியம் மட்டுமே பயன்படாது. of course we have learnt a little Marxism and Leninism, but Marxism and Leninism alone won’t do என்று கூறினார்.
அதாவது நாம் சீனாவின் உண்மைகளை மற்றும் பண்புகளிலிருந்து சீனப்பிரச்சனைகளை ஆராய்ந்தாக வேண்டும் என்பதை நான் கொள்கையாக கொண்டேன்.நான் படித்தேன் கருத்துகளை வைத்திருக்கிறேன்.ஆனால் சீனாவின் நிலைகளிலிருந்து தான் இந்த புரட்சி தொடங்க முடியும் என்பதை அறிந்து கொண்டேன், மக்களிடமிருந்து தெரிந்த கொண்டு தான் போராட்டத்தை கட்டினேனே தவிர வெறும் அதில் சொன்னதை அப்படியே செய்யவில்லை. நீங்கள் உங்கள் நாட்டில் அதைச் செய்ய வேண்டுமென்றால் உங்கள் நாட்டு சூழலுக்காக மாற்றிகொள்ளுங்கள், ஆனால் நான் சொல்லுகிற அறிவுரைகளை எடுத்துகொள்ளாதீர்கள் இது தான் மாவோ மார்க்சியத்தை மாற்றியது.
இதனை தான் பெரியார் யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும், பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே என்று கூறியது இங்கு நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று.