கண்டு உண்டு
பூஞ்சோலை இடங்கண்டு
பூரிக்கும் மலர்வண்டு,
பூப்பரிக்கும் கணங்கண்டு
பூத்திரா கண்களுண்டு,
வெண்மதியாள் முகங்கண்டு
வெண்கடலும் குளிர்வதுண்டு,
வெடுவெடு சொற்கண்டு
வெண்கடுகும் பொறிவதுண்டு,
சிறுநகை இதழ்கண்டு
சிரமும் சிலும்பலுண்டு,
சிறுமான் விழிகண்டு
சிருகமும் தைத்தலுண்டு,
சிறுதுடி அரைகண்டு
சிந்தையும் பிறழ்வதுண்டு,
சித்திரசிலை மேனிகண்டு
சித்தமும் பிரமையாவதுண்டு.