போகுந் துணைக்கண் தவாவினையே வந்தடையும் – அறநெறிச்சாரம் 131

நேரிசை வெண்பா

புகாஉண்பார் அல்லுண்ணார் போகுந் துணைக்கண்
தவாவினை வந்தடையக் கண்டும் - அவாவினைப்
பற்றுச்செய்(து) என்னை பயமின்றால் நன்னெஞ்சே!
ஒற்றி உடம்போம் புதற்கு. 131

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

எனது நல்ல நெஞ்சமே! பகலில் சோறுண்ட எவரும் இரவில் சோறுண்ண இருப்பார்களா என்ற உறுதியின்றி உயிரை விட்டு இறந்து போகலாம்.

உயிர் நீங்கும் காலத்தில் தவறாது ஒருவன் செய்த நல்வினை, தீவினையே அவனை வந்து சேர்வதை அறிஞர்களிடம் கேட்டுணர்ந்தும், உடைமையல்லாத இவ்வுடம்பினைப் பாதுகாத்தற்கு பொருள்களிடத்து ஆசை கொள்ளுதலால் விளைவதென்ன? யாதொரு பயனுமில்லை.

குறிப்பு: ஒற்றி - அடைமானமாய்க் கொண்டுள்ள பொருள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jul-22, 3:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

சிறந்த கட்டுரைகள்

மேலே