உங்களுக்காக ஒரு கடிதம் 28

ஹாய்ய்ய்....
முதலில் நீங்கள் தெரிந்தோ..தெரியாமலோ...செய்யும் தவறு என்னவென்றால், உங்கள் நட்பை நம்புவது.அது மட்டும் அல்லாது அவர்களோடு உங்களை ஒப்பிடுவது. அவளுக்கு மட்டும் "ஆள் " இருக்கிறான்.அதனால் எனக்கும் உடனே வேண்டும் என்று எதை பற்றியும் யோசிக்காமல், " ஆள் " எப்படி?அவனுடைய பின்புலம் என்ன? அவனுடைய குடும்ப சூழ்நிலை என்ன? இப்படி எதுவுமே தெரியாமல் அவன் அடிக்கும் மொக்க ஜோக்குக்கும்...வாங்கித்தரும் அல்ப கிப்ட்டுக்கும், இல்லை... இல்லை.... 'orio' சாக்லேட்டுக்கு விழுந்து விடுகிறீர்களே. அந்த சாக்லேட் கவரை கூட விடுவதில்லை. அதை ஐரன் பண்ணி, பத்திரப்படுத்தி..தினம் தினம் எடுத்து பார்த்து பார்த்து கனவுலகிலேயே வாழ்க்கையை முடித்து கொள்கிறீர்களே. பரிதாபம்தான். நீங்கள் பாவம் என்ன செய்வீர்கள்? உங்கள் வயது...உங்கள் இளமை...புரிகிறது. ஆனால் உலக நடப்பை பார்க்கும் போது எங்களுக்கு பயமாக இருக்கிறது.
" ஏய் எப்படிடி இருக்க? " " ஒரே சண்டைடி ..ஒரு மணி நேரம் பேசினா முக்கா மணிநேரம் சண்டை" " ஏய் நீதான் கொஞ்சம் விட்டு கொடுத்து போயேண்டி. ...." " சரிதான் நீ மூடிக்கிட்டு போயிடு...அவ்வளவுதான் உனக்கு மரியாதை" என்று நட்பையே முறித்துக்கொள்ள கூடிய மனோபாவம்தான் உங்களுக்குள் ஓங்கி நிற்கிறது. உடனே " Breakup " ஸ்டேட்டஸ் ...அவசர அவசரமாய் " single " " Not Comited " " ஏன் என்னை பிரிந்தாய்"... " போ நீ போ "...போன்ற " Breakup Songs டவுன்லோட் அதான் அதிகம் பதிவிறக்கம் செய்து முன்னிலையில் நிறுத்தி இருக்கிறீர்கள். இதெல்லாம் போகட்டும் நீங்கள் மோகத்தில் செய்கின்ற முக்கியமான தவறு...செலஃபீ போட்டோக்களையும்...விடீயோக்களையும் ஷேர் செய்வதுதான். என்ன சொன்னாலும் உங்கள் மண்டையில் ஏறுவதும் இல்லை...ஏறப்போவதும் இல்லை. ஏனென்றால் உங்கள் மனோநிலை அப்படி. அதனால் வரும் பின்விளைவுகளை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல்...கொஞ்சமும் பயமில்லாமல் ஒரு உணர்ச்சி வேகத்தில் செய்து விடுகிறீர்கள். நாங்கள் ஏதாவது கேட்டுவிட்டால் என்ன வார்த்தைகள் உபயோகிப்பதென்றே தெரியாமல் எங்கள் இதயங்களை..எங்கள் உணர்வுகளை கிழி கிழி என்று கிழித்து, குத்தி..குத்தி என்று குத்தி ரத்த காயங்களை ஏற்படுத்தி விடுகிறீர்களே. எங்கள் மரியாதையை இழந்தாலும் மேலும் மேலும் நீங்கள் நல்லா இருக்கணும் என்று மறுபடியும்... மறுபடியும் எங்களை நாங்களே காய படுத்திக்கொள்கிற பயித்தியங்களாய் ஆகிப்போகிறோம்.
நீங்கள் இதற்காக உபயோகிக்கும் உங்கள் மூளையை...உங்கள் திறமைகளை எவ்வளவு "ஷார்ட் கட்"கள்... எத்தனை எத்தனை குறுக்கு வழிகள்...தில்லு முல்லுகளில் வீணடித்து விடுகிறீர்களே. "எங்கள் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள். இந்த பாட்டை கேட்பதற்கு கூட உரிமையில்லையா? இந்த சினிமாவை பார்ப்பதற்கு கூட தகுதியில்லையா? ஏன் என்னையே சுற்றி சுற்றி வரீங்க? என்னை வேவு பார்க்கிறீர்களா? என் மேல் நம்பிக்கை இல்லையா?"
என்று உச்சஸ்தாதியில் கத்தி... இருக்கும் சூழ்நிலையையே இன்னும் இறுக்கமாக்கி... வாழ்க்கையையே இருட்டாக்கி விடுகிறீர்களே. ஒன்னே ஒன்னை சொல்லிக்கொள்ள நினைக்கிறேன். நாங்கள் ஒன்றும் காதலுக்கு எதிரிகள் இல்லை. உங்கள் காதலன் உங்கள் காதலுக்கு தகுதியானவனா? அதை கல்யாணம் ஆனபின்னாலும் அளவிட முடியாது. இந்த வயதில் அதற்கு வாய்ப்பே இல்லை. நிதானமாக இருங்கள். காலம் பதில் சொல்லும். பலவற்றை காலம் காட்டிக்கொடுக்கும். இரு பாலருக்கும்தான் சொல்கிறேன்.குணங்கள் மாறும். மாறும் அந்த குணங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோ பக்குவம் அல்லது தைரியம் இருக்கிறதா? அந்த பக்குவம் வருவதற்கே நாளாகும். அவசரம் வேண்டாம். அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்க வாழ்க்கை ஒன்றும் மலிவானதில்லை. வாழ்வு ஒரு முறைதான்.வாழ்ந்து பார்த்திட வேண்டும்தான். அதற்காக எல்லாவற்றையும் இழந்து விட முடியுமா?
தொடரும்

எழுதியவர் : (18-Jul-22, 8:04 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 75

மேலே