அப்பட்டமான உண்மை Naket Truth
உண்மையையே வா...வா...
இந்த குளத்தில் குளிக்கலாம்...
நீர் சுவையாகவும்...குளிர்ச்சியாகவும்
இருக்கிறது.
என்றழைத்தது பொய்.
பொய்யை மெய்யென நம்பி
உண்மையும் பொய்யுடன்
குளித்தது நிர்வாணமாய்...
ஆஹா...உண்மைதான்
குளியல்
ஆனந்தமாயும்...அனுபவமாயும்
இருந்தது.
பொய்யோ ...மெல்ல நழுவி
உண்மையின் உடுப்பை
போட்டுக்கொண்டு
ஓடிப்போனது ஊருக்குள்.
சுதாரித்த உண்மையோ
பதறிப்போய்
பொய்யை பிடிப்பதற்கு
தன்னிலை மறந்து...
தன்மானம் இழந்து...
துரத்தி ஓடியது
பொய்யின் பின்னே
நிர்வாணமாய்...
'அப்பட்டமான உண்மையை' பார்த்த
உலகம் முகம் சுழித்து..
எள்ளி நகையாடவும் செய்தது.
ஒன்றும் செய்யமுடியாமல்
தலை கவிழ்ந்து
குளத்துக்குள் மூழ்கிப் போனது
உண்மை.
ஓடிய பொய்யோ
உண்மையின் போர்வையில்
உல்லாசமாய்...
உற்ச்சாகமாய்...
தெம்பாய்...
கெத்தாய்....
தலை நிமிர்ந்து
உலகில் ராஜஉலா
போய்க்கொண்டிருக்கிறது.
உண்மையை அறிய
இப்பாழும் உலகம்
விருப்பமோ...ஏன்
சிறு முயற்சிகூட செய்யவில்லை.
இதுவும் ஒரு
அப்பட்டமான உண்மை.
[ 1896ல் Jean. L'eon G'erome எழுதியதின் தமிழாக்கம்.]
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
