சீர் மோனை வகைகள்

சீர் மோனைகள்

1. பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை!

மோனை இந்த வெண்பா அடியிலே முதற் சீரின் முதல் எழுத்தாக வரும் பா மூன்றாம் சீரின் முதலெழுத்தாகவும் வருகிறது.

நாலாஞ்சீரின் முதலெழுத்தாகவும் அதன் உயிரெழுத்து இனமான ப வருவதால், இவ்வடி 1, 3, 4 ஆம் சீர்களில் மோனை அமைந்த அடியாகும். இது மேற்கதுவாய் மோனை ஆகும்.

2. கற்க கசடற கற்றவை கற்றபின்

இத் திருக்குறள் அடியில் 1, 2, 3, 4 ஆகிய எல்லாச் சீர்களிலும் க என்னும் ஒரே எழுத்து மோனையாக வந்துள்ளது. இவ்வாறு அமைவது முற்று மோனை எனப்படும்.

அடி மோனைகள்

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

மேலே காட்டிய திருக்குறளில் இரண்டு அடிகளிலும் முதற் சீர்கள் த எனும் எழுத்தில் தொடங்குவதால் இதிலே அடிமோனை அமைந்துள்ளது.

அடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே.

அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும்.

இணை மோனை:

அணிமலர் அசோகின் தளிர் நலம் கவற்றி

பொழிப்பு மோனை:

அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீரடி

ஒரூஉ மோனை:

அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி

கூழை மோனை:

அகன்ற அல்குல் அம்நுண் மருங்குல்

மேற்கதுவாய் மோனை:

அரும்பிய கோங்கை அவ்வளை அமைத்தோன்

கீழ்க்கதுவாய் மோனை:

அவிர்மதி அனைய திருநுதல் அணங்கு

முற்று மோனை:

அயில்வேல் அணுக்கி அம்பலைத்து அமர்ந்த

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jul-22, 11:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
Tanglish : seer monai vakaikal
பார்வை : 442

மேலே