ஆண் என்பவன்
ஆண் என்பவன்...
🌺🌺🌺🌺🌺
ஆண்மகன் என்பவன் ஆளுமை மிக்கவன் /
பெண்மகள் உறவினில் பெருமைகள் சேர்ப்பவன் /
குடும்பம் எனுமோர் குமுகாய உறுப்பின்
இடும்பைகள் தீர்த்திடும் இந்திரன் ஆனவன் /
வீட்டின் தலைமகன் வீரத்தில் பெருமகன் 
நாட்டின் காவலன் நன்மையின் உறைவிடம்/
பீடுடைப் பெண்டிரைப் பிள்ளைகள் பெரியோரை/
நாடிடும் நலிந்தவர் நலம்பேணும் நல்லவன் /
காதலை வீரத்தை ஈட்டலை ஈதலை /
மாதரை மக்களை மதிப்பவன் துதிப்பவன் !!
-யாதுமறியான்.

