ஏழையின் கண்ணீரில்...

💧💧💧💧💧💧💧💧💧💧💧

*ஏழைகளின்*
*கண்ணீரில்...*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💧💧💧💧💧💧💧💧💧💧💧

எனது நாட்டில்
ஏழைகள் .....
கையொப்பமிடாத
கைதிகளாகவும்....
கைவிளங்கில்லாத
அடிமைகளாகவும்.....
அடையாள அட்டையில்லாத
அகதிகளாகவும் தான்
வாழ்கின்றனர்......!!!

ஏழைகள் வடிக்கும்
வேர்வைத்துளிகள்
முதலாளிகளின்
வங்கிக் கணக்கில்
பணமாக மாற்றப்படுகிறது...!!!

ஏழைகளின்
பட்டினியும்
பழைய உணவும் தான்
முதலாளிகளுக்கு
பாலும் பழமும்
வாங்கிக் கொடுக்கிறது....!!!

ஏழைகளின்
கண்களில் வழியும்
கண்ணீர் துளிகளில் தான்
முதலாளி வீட்டின்
தொட்டிச்செடிகள் கூட
செழிப்பாக இருக்கின்றது....!!!

ஏழைகளின்
கிழிசல் ஆடைகளும்
அழுக்கு ஆடைகளும்தான்
முதலாளிகளின்
பட்டாடைகளையும்
வெள்ளை சட்டை
வேட்டிகளையும்
விலை பேசுகிறது....!!!

ஏழைகள்
"மாடாய் உழைத்து
ஓடாய் தேய்ந்தாலும் "
இந்த முதலாளிகளின்
மனம் மட்டும்
"அணுவாய் கூட
தேய்வதில்லை......!!!"

இன்னும்
எத்தனை நாட்களுக்குத் தான்
கைகளைக்
கட்டிக் கொண்டிருக்கப் போகின்றீர்கள்.....?
உடனே !
கைகளை உயர்த்துங்கள்....
உங்கள் தலைமுறைகளின்
வாழ்க்கையாவது
நாளை உயரட்டும்.......!!!

*கவிதை ரசிகன் குமரேசன்*

💧💧💧💧💧💧💧💧💧💧💧

எழுதியவர் : கவிதை ரசிகன் (28-Jul-22, 10:06 pm)
Tanglish : yezhaiyin kanneeril
பார்வை : 31

மேலே