பார்வைகள் மோதல் காதல்

அவள் பார்த்தாள் நான் பார்த்தேன்
என்னுள்ளம் அவளிடம் பறிபோக அவள்
என் நெஞ்சில் தஞ்சம் தஞ்சம் பின்னே
காதலெனும் புதிய உறவின் ஆரம்பம்
அவள் மொழியோ இனமோ நாடோ
அறிந்திலேன் நான் இப்படித்தான் என்னைப்பற்றி
ஒன்றும் அறியாள் கன்னியவளும்
எல்லாம் தாண்டி எம்மை இணைத்தது
அவள் பார்வை அந்த மலர்விழிப்பார்வை
ஒன்றே என்று நான் எண்ண
என் கண்களின் கூறிய பார்வைதான்
என்றாள் பேசிய அவளும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Aug-22, 9:24 am)
பார்வை : 67

மேலே