கூவம் நதி
சென்னை கூவம் நதி
மணக்குமென்று
சொன்னார்கள்...!!
சொல்லிக்கொண்டும்
இருக்கின்றார்கள்...!!
வருங்காலத்திலும்
சொல்வார்கள் போலும்...!!
வருடங்கள் பல
கடந்துக் கொண்டே
இருக்கின்றது
கூவம் நதியும்
அதன் மணம் மாறாமல்
ஓடிக்கொண்டே
இருக்கின்றது...!!
நல்ல காலம் வருமென்று
நம்புவோம்
நம்பிக்கைத்தானே
மனிதனின் வாழ்க்கை...!!
--கோவை சுபா