காலம்

எவ்வளவு கண்ணீர்த் துளிகளை
அள்ளிச் சாப்பிடும்
இந்த "காலம்" !

அளவென்பது அதற்கு
ஒரு பொருட்டல்லவே!

அதன் வயிறு நிறைய
இன்னும் எவ்வளவு கண்ணீர்த் துளிகள்
வேண்டுமோ!?

கடந்து செல்லத்தான்
காத்திருக்கின்றேன், அந்த
வீங்கிய வயிறு கொண்ட
"காலத்தினை"

எழுதியவர் : மணிகண்டன் (11-Aug-22, 8:14 pm)
சேர்த்தது : Manikandan
Tanglish : kaalam
பார்வை : 33

மேலே