மனித போர்வையில்

அரசோ அரசியலோ அதிகாரியோ
கட்சித் தலைவரோ எவராயினும்
கீழ்நிலையில் உள்ளோரை படியாக்கி
தான் மட்டுமே தலைச் சிறந்தவராய்
தரணிக்கு காட்ட தரமில்லா செயல்களை
கீழோர் தலையில் திணித்து மிரட்டி
சூரராய் பதவியில் நீதியின்றி உள்ளனரே
அதனை வெகுண்டு கேட்டால் பலவகை
தொல்லையை நடைமுறையில் கொடுத்தே
எல்லா வகையிலும் துன்பம் தருகிறாரே
கூட்டத்தில் பேசும் போதோ
இறைவன் நகலென இயம்பு கின்றனரே
இவர்களும் மனித போர்வையில் மாட்சிமையாய்.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (25-Aug-22, 8:59 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : manitha porvaiyil
பார்வை : 44

மேலே